இந்தக் கட்டுரைகள் எல்லாமே வாழ்க்கையில் நிகழ்ந்தவை, கற்பனையில் தொகுக்கப்பட்டு மையம் கண்டடையப்பட்டவை. அமைப்பில் கட்டுரைக்கும் கதைக்கும் நடுவே நிற்பவை. உணர்ச்சிகரமானவை, கதைக்கான ஒழுக்கும் ஓட்டமும் கொண்டவை, ஆனால் தங்களை கட்டுரையென்றே முன்வைப்பவை ”அறம் போன்ற கதைகளில் மாமனிதர்களைப் பற்றிச் சொன்னேன். இக்கதைகள் எளிய மனிதர்களின் கதைகள். கதை என்றவகையில் அவர்களுள் எந்த வேறுபாடுமில்லை. மனிதர்களை கருவாக்கி இங்கே தன்னை நிகழ்த்திக்கொள்ளும் மாபெரும் கதை ஒன்று உள்ளது. அதன் ஒரு சிறுமூலையை தன் உயிர்ச்சத்தால் பின்னி விரிக்கும் சிறு சிலந்தி என என்னை உணர்கிறேன்” என ஆசிரியர் இக்கதைகளைப் பற்றிச் சொல்கிறார்.
வாழ்விலே ஒரு முறை / Vaazhvile Oru Murai)
CHF15.00Preis
Book Title வாழ்விலே ஒரு முறை (vaazhvileorumurai) Author ஜெயமோகன் (Jeyamohan) Publisher விஷ்ணுபுரம் பதிப்பகம் (Vishnupuram Publication) Published On Jan 2024 Year 2024 Edition 1 Format Paper Back Category Essay | கட்டுரை, Literature | இலக்கியம், 2024 New Releases