top of page

நாம் உட்கொள்ளும் ஒவ்வொரு மருந்துக்கும் ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. உண்ணாமல், உறங்காமல், சமயங்களில் உயிரையும் பணயம் வைத்து விஞ்ஞானிகள் இந்த மருத்துகளைக் கண்டு பிடிக்காமல் போயிருந்தால் நாம் இன்று இல்லை. மருந்துகள் மட்டுமல்ல, நவீன பரிசோதனை முறைகள், சிகிச்சைமுறைகள், மருத்துவக் கருவிகள் என்று மருத்துவ உலகம் இன்று அதிசயிக்கத்தக்க முறையில் நவீனமடைந்திருப்பதற்குப் பின்னால் முகம் அறியாத பல விஞ்ஞானிகள் இருக்கின்றனர். அந்த விஞ்ஞானிகளை நினைவுகூர்வதும் கொண்டாடுவதும் நம் கடமை. இதுவரை நாம் அறிந்திராத மாபெரும் சாதனையாளர்களை இந்நூல் நமக்கு எளிமையாகவும் சுவையாகவும் அறிமுகம் செய்கிறது. சில முக்கியமான மருந்துகள் எவ்வாறு கண்டுபிடிக்கப் பட்டன, எத்தகைய மனித ஆற்றலும் அசாத்திய உழைப்பும் அதற்குத் தேவைப்பட்டன என்பதை டாக்டர் கு. கணேசன் விவரிக்கும்போது விஞ்ஞானிகள் மீதும் மருத்துவர்கள் மீதும் நம் வியப்பும் மரியாதையும் பல மடங்கு அதிகரிக்கின்றன. பொதுநல மருத்துவரும் புகழ்பெற்ற மருத்துவ அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் கு. கணேசனின் இந்நூல் நம் விழிகளைக் கடந்து இதயத்தைத் தொடுகிறது.

 

மருந்துகள் பிறந்த கதை / Marunthugal pirantha kathai

CHF15.00Preis
Anzahl
  • Author:            டாக்டர் கு.கணேசன் (Doctor K.Ganeshan)

    Publisher:        கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)

    No. of pages:    168

    Language:        தமிழ்

    ISBN:                9789351350378

    Published on:   2019

    Book Format:    Paperback

    Category:           உடல்நலம் / மருத்துவம், வரலாறு, அறிவியல் / தொழில்நுட்பம், விஞ்ஞானம், Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம்

     

தமிழ் புத்தகங்கள்

சுவிட்சர்லாந்து

tamilbooksinfo@gmail.com

தொலைபேசி: 0791043701

சமூக

  • Facebook Social Icon
  • Instagram

எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்

சமர்ப்பித்ததற்கு நன்றி!

bottom of page