பாரதியின் கவிதைத்தொகுப்பு என்பது வெறும் தொகுப்பு நூல் அல்ல.
அது - சூரிய பழத்தையும் சந்திரக் கனியையும் சாறு பிழிந்து சேர்த்து வைத்திருக்கும் சரித்திர ஜாடி.
நெருப்பில் இழைபிரித்து,நெய்யிலே ஊறவைத்து, நெஞ்சத் தறியில் நெய்தெடுக்கப்பட்டவையும், ஒட்டுமொத்த மானுடத்திற்கும் பொன்னாடை போருத்துபவையுமான காவியப்பட்டுகளை உள்ளடக்கியிருக்கும் காலப்பெட்டகமே அவனது கவிதைப் புத்தகம்.
ஊழிக் கூத்தின் உடுக்கைச் சத்தத்தையும் அவன் பாடல்களில் கேட்கலாம். மரகத வீணையின் நளின ராகங்களையும் செவிமடுக்கலாம்.
பாரதியார் கவிதைகள் / Bharathiyar Kavithaikal
CHF20.00Preis
Author: பாரதியார் (Bharathiyar)
Publisher: திருமகள் நிலையம் (Tirumagal nilayam)
Pages: 482
Categorie: Poetry | கவிதை