top of page

வெண்முரசு மகாபாரத நாவல் தொடர் வரிசையில் நான்காவது புத்தகம். நீலமேகவண்ணனாகிய கண்ணனின் கதையைச் சொல்லும் நவீன நாவல் ‘நீலம்’. கண்ணனின் இளமைத் தோழியான ராதையை மையமாக்கி கண்ணனின் கதை விரிகிறது. ராதை அறியும் கண்ணன் ஒரு சித்திரம். அவளைச் சுற்றி இருப்பவர்கள் அறியும் கண்ணன் இன்னொரு சித்திரம். ராதை அறிவது குழந்தையை, தோழனை, காதலனை. அவள் கொண்டது அழியாத பிரேமை. மறுபக்கம் கம்சனின் சிறையில் பிறந்து கோகுலத்தில் வளர்ந்து மதுரையை வென்றெடுக்கும் கிருஷ்ணனின் கதை.கம்சனும் ராதை அளவுக்கு கிருஷ்ணனை எண்ணிக் கொண்டிருந்த உபாசகனே. அவன் சென்ற வழி ஒன்று. ராதை சென்ற வழி ஒன்று. இருவழிகளையும் இருவகை யோக மரபுகளுக்கான குறியீடுகளாகவும் இந்நாவல் கையாள்கிறது. ராதாமாதவம் என்னும் ராஸமார்க்கம் என்றும் சொல்லப்படும் கிருஷ்ண உபாசனையை அதை உணரும் வாசகர்களுக்காக முன்வைக்கிறது.பூத்துக்குலுங்கும் விருந்தவனம், பெருகிச்செல்லும் யமுனை, வேய்குழல் நாதம் என இனிமையை அனைத்து வரிகளிலும் நிறைத்து வைத்திருக்கிறது இந்நாவல். பித்தின் விளிம்பில் நடனமிட்டுச் செல்லும் மொழி. ஒவ்வொரு வரியையும் வாசிக்க வைக்கும் கவித்துவம். கண்ணனை இலக்கியம் வழியாக அணுகிச்செல்லும் ஒரு யோகம் இது.****

 

பைபிளை மிஞ்சும் அளவுக்கு உலகின் மிகப்பெரிய இலக்கியப் படைப்பாக உள்ள மகாபாரதத்தை, நாவல் வடிவில் எழுதும் ஜெயமோகனின் முயற்சி மிகவும் தைரியமானது – கமல்*

 

பெரிய மகத்தான முயற்சி – அசோகமித்திரன்*

 

நவீன படைப்பிலக்கிய ஆளுமையோடு ஜெயமோகன் எழுதத் தொடங்கியிருக்கும் இந்த மகாபாரத நாவல் ஒரு மைல்கல்லாக அமையும் – நாஞ்சில் நாடன்*

 

இது உலகப் பேரிலக்கியமாக மலர வேண்டும் – பிரபஞ்சன்*

 

திரைத்துறையில் நானும் கமலும் செய்ய முடியாததை எழுத்துத் துறையில் ஜெயமோகன் சாதித்துக் காட்டி உள்ளார் – இளையராஜா

நீலம் / Neelam

CHF24.00Preis
Anzahl
  • Author:  by ஜெயமோகன் [Jeyamohan]

    Categories: Novel | நாவல் , சரித்திர நாவல்கள் | Historical Novels , Hindu | இந்து மதம்

    Format: Hard Bound

    Pages:   357 pages

    Language: Tamil

    Publisher: கிழக்கு பதிப்பகம்

தமிழ் புத்தகங்கள்

சுவிட்சர்லாந்து

tamilbooksinfo@gmail.com

தொலைபேசி: 0791043701

சமூக

  • Facebook Social Icon
  • Instagram

எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்

சமர்ப்பித்ததற்கு நன்றி!

bottom of page