top of page

“தொழில் முனைவோராகி, சரித்திரம் படைக்க வேண்டும் என்கிற கனவு ஆயிரக்கணக்கான ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அந்தக் கனவை நிறைவாக்குவதற்கு இந்நூல் அற்புதமாய் வழிவகுக்கும். தொழிலில் வெற்றி அடையும் வழிமுறைகளைக் குறு மற்றும் சிறு தொழில் முனைவோர்களுக்கு ஏற்ற பாணியில் கூறியிருப்பது அருமை.”

- கல்பனா சங்கர், Chairperson, Hand in Hand India

 

“தொழில் முனைதலில் உள்ள சவால்களைச் சமாளித்து எப்படி வெற்றி பெறுவது என்பதைத் தலைசிறந்த வல்லுநர்கள் எளிதாகப் புரியுமாறும் நடைமுறைக்கு ஏற்றவாறும் விளக்கி இருக்கிறார்கள். சிறு தொழில்முனைவோரும் மற்றும் தொழில்முனையும் ஆர்வலர் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய தொகுப்பு.”

- வை. சங்கர், நிறுவனர், CAMS

 

“மக்களைச் சுலபமாகச் சென்றடைய எளிமையான சுய கற்றல். சிறு மற்றும் குறுந் தொழில் செய்ய விரும்புவோருக்கான சிறந்த உதாரணங்களுடன் வடிவமைக்கபட்ட பதினேழு முத்தான அத்தியாயங்கள். மற்றும் தொழில் செய்யும் ஒவ்வொருவரும் படித்துப் பயன்பெறும் வகையில் அமைந்துள்ள தொகுப்பு.”

- கல்பாதி சுரேஷ், தலைவர், கல்பாதி AGS குழுமம்

 

“நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் குறு மற்றும் நுண் தொழில் முனைவோருக்கு ஒரு பெரிய பங்கு உண்டு. சிறு, குறு, மற்றும் நுண் தொழில் செய்வோருக்குத் தினசரி சவால்களை எதிர்கொண்டு தொழிலை வெற்றிகரமாக நடத்திச் செல்ல இந்த நூல் பல உத்திகளை அளித்திருக்கிறது. தொழில் முனைவோர் மட்டுமின்றி தொழில் மற்றும் வணிக ஆர்வலர் அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டிய நூல்.”

- சீ. நாகராஜன், இந்திய ஆட்சிப் பணி, இயக்குனர், தொழில் முனைவு மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு அரசு, சென்னை

 

“தொழில் மற்றும் வணிகத்தில் வெற்றி பெறுவதற்கு மென் திறன்கள் மிகவும் முக்கியமானது. பிசினெஸ் கருத்தோடு மென் திறன்களை வளர்த்துக் கொள்வதின் மூலம் எப்படி வெற்றி அடையலாம் என்பதை அடித்தளத் தொழில் முனைவோருக்கு எளிதில் புரியும்படி ஆசிரியர்கள் விளக்கி இருக்கிறார்கள். நாவல் பாணியில் சுவாரசியமான முறையில் அனைத்துக் கட்டுரைகளும் வடிவமைக்கப்பட்டிருப்பது அருமையிலும் அருமை.”

- வே. விஷ்ணு, இந்திய ஆட்சிப் பணி, நிர்வாக இயக்குனர், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்.

 

“சுயசார்புடன் விளங்க அத்துனை வளங்களையும் இந்தியா தன்னகத்தே பெற்றுள்ளது. அந்த வளங்களை முறையாகப் பயன்படுத்தவும், உலகிற்கே முன்னோடியான சுயசார்பு நாடாக சிறக்கவும் சிறு, குறு தொழில்முனைவோர்களின் சரியான முன்னெடுப்பு அவசியம். அத்தகைய  சிறு மற்றும் குறுந் தொழில் முனைவோர்களுக்கு பிசினெஸ்-ஐ வெற்றிகரமாக நடத்த உதவும் வணிக நுணுக்கங்களை இந்நூல் எளிய மொழியில் திறம்பட வழங்குகிறது. தொழில் செய்வோர் யதார்த்தத்தில் சந்திக்கும் பற்பல சவால்களை எப்படிக் கையாள்வது என்பதை உதாரணங்களோடு விளக்கியிருப்பது அருமை. தொழில் முனைவோர் மட்டுமின்றி தொழில் முனைவதில் ஆர்வம் உள்ளோரும் கட்டாயம் வாசித்துப் பயன் பெறவேண்டிய புத்தகம் இது."

- சதீஷ்குமார் வெங்கடாசலம், துணை ஆசிரியர் - கல்வி மலர், தினமலர், சென்னை

தொடுவானம் தேடி / Thoduvaanam thedi

CHF17.00Preis
Anzahl
  • Author: அ. தில்லைராஜன், கோ. அருண்குமார், சஜி மேத்யூ

    Publisher: வானவில் புத்தகாலயம்

    No. of pages: 264

     Language: தமிழ்

    ISBN: 9788194782759

    Published on: 2020

    Book Format: Paperback

தமிழ் புத்தகங்கள்

சுவிட்சர்லாந்து

tamilbooksinfo@gmail.com

தொலைபேசி: 0791043701

சமூக

  • Facebook Social Icon
  • Instagram

எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்

சமர்ப்பித்ததற்கு நன்றி!

bottom of page