சுவை புதிது, பொருள் புதிது’ என்றார் மகாகவி பாரதி.
‘இதுதான் நான்’ என்கிற இப்புத்தகத்தில் பிரபுதேவா சுவை மிகுந்தும் பொருள் மிகுந்தும் உள்ள தனது வாழ்வியல் செய்திகளை வாசகர்களுடன் மனம் திறந்து பதிவு செய்துள்ளார்.
நாடறிந்த நடனக் கலைஞர், இயக்குநர், நடிகர் என்கிற பன்மைத்துவம் வாய்ந்த கலைகளில் கைதேர்ந்த ஒருவர் தனது தடங்களை நமக்கு அடையாளம் காட்டுகிறார். இது அவரது ஞாபகத் தடம்தான். இதை வாசிக்கிறவர்களையும் அந்தத் தடத்தில் சக பயணியாக்கிவிடுகிறது அவர் சொல்கிற செய்திகள்.
ஒரு சினிமா கலைஞர், யதார்த்த உலகுக்கு ஏற்ற வடிவில், உலகியல் தன்மையோடு தன்னை எவ்விதம் தகவமைத்துக்கொண்டுள்ளார் என்பதை இப்புத்தகத்தின் பல அத்தியாயங்கள் சுவையாகச் சொல்கின்றன.
‘இதுதான் நான்’ இக்கட்டுரையில் பிரபுதேவாவின் மனதின் உயரம் தெரிகிறது. சினிமா பிரபலம் என்பதையும் தாண்டி, தன்னம்பிக்கை விதையை இளையவர்கள் நெஞ்சங்களில் விதைக்கும் இக்கட்டுரைத் தொடர், புத்தக வடிவம் பெறுகிறது.
இதுதான் நான் - பிரபுதேவா- Ithuthaan Naan -Prabhu Deva
Author: பிரபுதேவா
Publisher: தமிழ் திசை
No. of pages: 309
Language: தமிழ்
Published on: 2019
Book Format: Paperback
Category: வாழ்க்கை வரலாறு
Subject: சினிமா

