top of page

பாரதியாரின் கவிதைகளில் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய ‘முப்பெரும் பாடல்கள்’உண்மையான கவித்துவம் மிளிரும் படைப்புகள் என்பது பாரதியை ஆழ்ந்து பயின்ற இலக்கிய வாசகர்கள் மற்றும் ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து. இவையனைத்தும் பாரதியாரின் புதுவை வாசத்தின் போது இயற்றப் பெற்றவை.

புதுச்சேரிக்கு வந்த இரண்டாண்டுகளில் பாரதியின் பத்திரிகை முயற்சிகளெல்லாம் நின்று போயின. 1910க்குப் பிறகு பத்திரிகை விவகாரங்களை மறந்து, புத்தகமாக வெளியாகக் கூடிய விஷயங்களை எழுதவேண்டும் என்று அவர் முனைந்து ஈடுபட்டார். இதன் விளைவாகத்தான், 1912ம் ஆண்டில், மேற்கூறிய முப்பெரும் பாடல்கள் உருப்பெற்றன. ஆயினும் பல்வேறு காரணங்களால், இவை புத்தகமாக வெளிவருவதற்கு மேலும் சில ஆண்டுகள் பிடித்தன. இவற்றின் நடையும் தொனியும் பொருளாழமும் இதற்கு முந்தைய காலகட்டத்தில் பாரதி உணர்ச்சிப் பிழம்பாக எழுதிய தேசபக்தி, தெய்வபக்திப் பாடல்களின்றும் குறிப்பிடத்தக்க வகையில் வேறுபடுகின்றன என்பதும் பாரதி ஆய்வாளர்களால் பேசப்பட்டுள்ளது. இதில், கண்ணன் பாட்டு பாரதியின் தனித்துவமிக்க கவிதா முத்திரை சுடர்விடும் அற்புதமான படைப்பு.

பாரதியின் கண்ணன் பாட்டு இரகசியம்

18,00 CHFPreis
Anzahl
  • எழுத்தாளர் :         லோகானந்தா, Loganantha

    பதிப்பகம் :               கீதம் பப்ளிகேசன், Geetham Publication

    புத்தக வகை          ஆன்மீகம் , Aanmeegam

    பக்கங்கள் :             174

    Published on                2016

    ISBN:                                  9789383812400

bottom of page