மைய நீரோட்டம் எனச் சொல்லப்படும் உலகில் இருப்பவர்கள் நுழையத் தயங்குகிற சாம்பல் உலகத்தில் வெளிச்சத்தைத் தேடுகிற நாவல் இது. அவர்களுக்கான காரணங்களையும் நியாயங்களையும் அவர்களது பின்புலத்தில் வைத்துப் பார்க்கிறது. இந்தச் சாம்பல் நிற உலகத்தில் யார் யாரெல்லாம் குற்றவாளிகள். குற்றம் என்றால் என்ன என்பது குறித்த கேள்விகளையும் எழுப்புகிறது. நகரத்தின் வளர்ச்சிப் பசி தின்று தீர்த்த அந்த உலக்த்தின் யதார்த்தங்களயும் விழுமியங்களையும் தேடிச் சென்னையின் சந்துகளில் நம்மைப் பயணிக்க வைக்கிறது. இதில் வசிப்பவர்கள் சென்னையின் வளர்ச்சிக்குத் தங்கள் வாழ்க்கையை விலையாகக் கொடுத்திருக்கிறார்கள். குற்றங்களும் உதிரித் தொழில்களும் மட்டுமல்ல அவர்கள் வாழ்க்கை. அவர்களுக்கும் முன்னேற வேண்டும் என்னும் ஆசை உண்டு. கடவுளர்கள் உண்டு, உறவுகளும் லட்சியங்களும் உண்டு. ‘பொன்னகரம்’ வெளியில் இருப்பவர்களுக்கு ஒரு சிறிய காலனி. ஆனால் அவர்களைப் பொருத்தவரை அது ஒரு ஊர். அந்த ஊரின் பொதுத்தன்மை சாம்பல் நிறம். அந்தச் சாம்பல் நிறப் புகைக் கூட்டத்தை விலக்கி அந்த ஊரின் தரிசனத்தை அரவிந்தன் காட்டுகிறார். உங்களை இன்னொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும் இந்நாவல் ஒரு கட்டத்தில் உங்களையும் அந்த உலகத்தின் கதாபாத்திரங்களாக மாற்றிவிடலாம்.
பொன்னகரம் / Ponnagaram
Author: அரவிந்தன் (ஆசிரியர்)
Categories: Novel | நாவல் ,
Year: 2015
ISBN: 9789384641344
Page: 264
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
