எதிர்வரும் அபாயத்தை எதிர்கொள்ளும் ஒரே வழி உலக உயரத்திற்கு மொழியை உயர்த்திப் பிடிப்பதுதான். வாழ்வியல் மாற்றங்களை எல்லாம் உண்டு செரிக்கும் வயிற்றை மொழிக்கு உண்டாக்குவதுதான். அந்தச் சமுத்திர முயற்சியின் ஒரு துளிதான் இந்தத் ''தண்ணீர் தேசம்''. கடலியலை இலக்கியப்படுத்தும் ஒரு பிள்ளை முயற்சி.
இந்தத் '' தண்ணீர் தேசம்.'' கதை விஞ்ஞானத்தை விழுங்கிவிடக்கூடாது என்பதானால் ஒரு மெல்லிய கதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். என்னதான் இருந்தாலும் இலக்கியத்தின் உயிர் என்பது அறிவு அல்ல; உணர்ச்சிதான். அறிவென்ற தட்டில் உணர்ச்சியையும் உணர்ச்சியென்ற தட்டில் அறிவையும் மாறிமாறிப் பரிமாறினேன். கவிதையின் உரங்களை அள்ளி விஞ்ஞானச்செடியின் வேர்களில் தூவத் துடித்திருக்கிறேன்.
தண்ணீர் தேசம் / Thanneer desam
Author: வைரமுத்து
Publisher: சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்.
No. of pages: 264
Categories: Poetry | கவிதை / நாவல்
- Edition: 17
- Format: Paper Back
- Language: Tamil