தமிழ் மொழியில் எழுந்த புராணங்களுள் மூன்றினை மட்டும் வேறாகப் பிரித்துச் சிவபெருமானின் மூன்று கண்களோடும் ஒப்பிட்டு வளர்த்தனர் தமிழர். இவற்றை முப்பெரும் புராணம் என்பது மரபு. சேக்கிழாரின் பெரியபுராணத்தைச் சிவனின் வலக்கண் என்று போற்றுவர். பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணத்தைச் சிவனின் இடக்கண்ணுடன் ஒப்புமை கூறுவர். கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணத்தைச் சிவனின் நெற்றிக் கண்ணுடன் இணைத்துப் பேசுவர். இவற்றுள் மதுரைத் தலபுராணமாகப் போற்றப்படுவது திருவிளையாடல் புராணம். சிவபெருமான் அடியவர்கள் பாலும் சிற்றுயிர்களின் பாலும் கொண்ட அளப்பரிய அன்பால் கருணை மிகுந்து தாமே இவ்வுலகில் வந்து அருள் செய்த வரலாற்றைக் கூறுவது திருவிளையாடல் புராணம். இறைவனின் 64 திருவிளையாடல்களைக் கூறும் இப்புராணத்தின் முக்கியமான சில திருவிளையாடல்களை மட்டும் 20 பிரிவுகளில் மிகச் சுருக்கமாக அதே வேளையில் மிகத் தெளிவாக விவரிக்கின்றது இந்நூல்.
Literature இலக்கியம் Gowra Agencies கௌரா பதிப்பகக் குழுமம் Gandhimathi Ravi காந்திமதி ரவி
தித்திக்கும் திருவிளையாடல் எளிய முறையில் / Thiththikkum Thiruvilaiyadal
Author: காந்திமதி ரவி, Gandhimathi Ravi
Publisher: கௌரா பதிப்பகக் குழுமம்
Language: தமிழ்
Published on: 2025
Book Format: Paperback
Subject: இலக்கியம்

