கொண்டாட்டமாய் வார இறுதியைக் கழிக்க ஒன்றுகூடும் நண்பர்கள் காலையில் சீக்கிரமாய் எழுந்திருக்காமல் நீண்ட நேரம் தூங்கும் வழக்கம் கொண்ட ஒரு நண்பரை விடிகாலையிலே எழுப்பத் திட்டமிட்டு, விளையாட்டாய் சில அலாரம் கடியாரங்களை வாங்கி அவருடைய அறையில் வைக்கிறார்கள்.
அவரை மறுநாள் காலையில் சீக்கிரம் எழுப்ப...
இனி பெரும் மணியோசை அடித்துக்கூட எழுப்ப முடியாதபடி அவர் இறந்து விடுகின்றார்.
இயற்கையாய் அல்ல... கொலை யார் செய்தது இக்கொலையை? எதற்காக?
இக்குழப்பத்தில், காரில் அடிபட்டதாய்க் கருதப்படும் ஓர் இளைஞன் மூச்சுக்கு போராடியபடி 'செவன் டயல்ஸ்' என்ற பெயரைச் சொல்லி வீழ்கிறான். 'செவன் டயல்ஸ்' என்றால் என்ன? கடியாரமா? அல்லது இடத்தின் பெயரா? அல்லது வேறு ஏதாவதா?
இக்கேள்விகளின் மீது துப்பறியும் நிபுணரும், மேலும் துப்பறிதல் பற்றி தெரியாத ஒரு அமெச்சூரும் நுழைகின்றார்கள். இம்முயற்சியில் இடம்பெறும் வீரதீர சாகசங்களையும் திடீர் திருப்பங்களையும்
டிக்... டிக்... டிக்... டிக்... என நெஞ்சு விறுவிறுப்பில் துடிக்க படித்து ரசியுங்கள்...
டிக்... டிக்... டிக்.. / Tik...Tik...Tik
Author: அகதா கிறிஸ்டி Agatha Christie
Publisher: Kannadhasan Pathippagam
No. of pages: 455 pages
Language: தமிழ் Tamil
ISBN: 9788184025286
Book Format: Paperback
Category: Novel | நாவல், Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர்

