top of page

இந்த புத்தகத்தை முதல் தடவை  வாசிப்பவர்களுக்கு  கட்டாயம் இது நாவலா அல்லது எவ்வகையினை சேர்ந்தது என்ற குழப்பம் வரும் என நினைக்கிறேன்.  ‘ஜே.ஜே.சிலகுறிப்புகள் பின் நவீனத்துவ வடிவத்தையும் நவீனத்துவ நோக்கையும் ஒரே சமயம் கொண்ட நாவல்’ என எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார். மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ள இந்த நாவலின் முதல் பகுதியில் நாவலின் ஆசிரியர்,  ஜே.ஜே உடனான தனது அனுபவங்கள், பிறர் மூலம் தெரிந்து கொண்ட விடயங்களை குறிப்பிடுகிறார். இரண்டாம் பகுதி ஜே.ஜே இன் நாட்குறிப்புகள் சிலவற்றின் மொழிபெயர்ப்பாக இருக்கிறது. மூன்றாவது பகுதியில் ஜே.ஜே யின் புத்தகங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜே.ஜே. சில குறிப்புகள் / JJ sila kurippugal

21,00 CHFPreis
Anzahl
  • Author: சுந்தர ராமசாமி

    Publisher: காலச்சுவடு

    No. of pages: 224

    Language: தமிழ்

    ISBN: 9788190080187

    Published on: 2014

    Book Format: Paperback

     Category: நாவல்

    Subject: பிற

bottom of page