எழுத்து பத்திரிகைக் காலத்திலும் தொடர்ந்து வானம்பாடி யுகத்திலும் புதுக்கவிதைக்கு நான் தடம் மாறியது வரலாற்றுக் கட்டாயம். காலத்தோடு போட்டி போட்டுக்கொண்டு ஓடியோடி இருபதுக்கு மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள் வெளிவந்தன.
அரசியலும் அறிவியலும் சமூகவியலும் வெவ்வேறு காலங்களில் என் கவிதைகளில் கொடி நாட்டியதுண்டு. ஆனாலும் அடித்தளம் எனக்கு மனிதம்தான்.
இன்று எனக்கு இணைபிரியாத தோழன் முதுமை. நாடெல்லாம் ஓடித் திரிந்த நாட்கள் நினைவுகளாய் மாறிப்போக என் சொந்த ஊருக்குள் தெருவுக்குள் வீட்டுக்குள் வாழும் காலம் இது. அதனால் கவிதைகளும் அந்த அனுபவங்களுக்கே அடையாளங்களாய்ப் பதிவு பெற்றிருக்கின்றன.
வாழும் உலகம் எல்லைகளுடையதாய் மாறிப் போனது. மனது மட்டும் சிலிர்த்துச் சிறகடித்துக் கொள்கிறது. அந்தக் காரணத்தினாலேயே இத்தொகுப்பு ‘கை நழுவும் காலம்’ என்று தன்னை அழைத்துக் கொள்கிறது.
- சிற்பி
கை நழுவும் காலம் / Kai Nazhuvum Kaalam
Author: சிற்பி பாலசுப்ரமணியம் (Sirpi Paalasupramaniyam)
Language: தமிழ்
Page: 93
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
Category: Poetry | கவிதை, 2023 New Arrivals
Published on : 2023