top of page

பட்டுக்கோட்டை பிரபாகர், மற்ற எழுத்தாளர்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு இளமை மிகுந்த தோற்றத்துக்கு சொந்தக்காரர். அவரது தோற்றத்தில் நீடித்திருக்கும் இளமை, அவரது எழுத்துக்களிலும் நீடித்திருப்பதே பட்டுக்கோட்டைப் பிரபாகரின் வெற்றிக்குக் காரணம்.

1980களில் பட்டுக்கோட்டை பிரபாகரின் தலையாரி தெரு, பட்டுக்கோட்டை என்ற முகவரி வாசகர்களுக்கு மனப்பாடம். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த அவருடைய தொட்டால் தொடரும், கனவுகள் இலவசம் ஆகிய கதைகள் இன்றும் வாசகர்களால் விரும்பிப் படிக்கப் படுபவை.

அன்றிலிருந்து இன்று வரையிலும்  தனது துள்ளலான நடை மற்றும் வசீகரமான கதை சொல்லும் முறையால் அடுத்தடுத்த தலைமுறை வாசகர்களையும் வென்று நூற்றுக் கணக்கான சிறுகதைகள், நாவல்கள், தொடர் கதைகள் ,தொலைக் காட்சித் தொடர்கள் , திரைப்படங்கள் என்று எழுத்தின் அத்தனை தளங்களிலும் தனது முத்திரயேத் தொடர்ந்து பதித்துவரும் பட்டுக் கோட்டை பிரபாகரின் முற்றிலும் மாறுபட்டு திரைக் கதை வடிவில் எழுதப்பட்ட நாவல் ஒரு காதலன் ஒரு காதலி.       

விகடன் வார இதழில் தொடராக வெளிவந்த பொழுது வெகுஜன வாசகர் வட்டத்தையும் தாண்டி சினிமாவைத் தன் கனவுத் தொழிற்சாலையாகக் கருதிய பலர் பட்டுக்கோட்டையாரை   தன் மானசீக குருவாக ஏற்றுக் கொண்டனர். உணர்ச்சிப்பூர்வமான ஒரு கதையை எப்படி காட்சிப்பூர்வமான திரைக்கதையாக மெருகேற்றுவது என்ற இராசவாதத்தைக் கற்றுக்கொடுத்த தன் திரையுலக ஆசான் கே. பாக்கியராஜிற்கு இந்நாவலை சமர்ப்பிக்கிறார்.

ஒரு காதலன் ஒரு காதலி / Oru Kaadhalan Oru Kaadhali

14,90 CHFPreis
Anzahl
  • ஒரு காதலன் ஒரு காதலி (Oru Kaadhalan Oru Kaadhali)

    Author: பட்டுக்கோட்டை பிரபாகர் (Pattukottai Prabhakar) (ஆசிரியர்)

    Publisher:சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications)

    Category: Novel | நாவல், Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர்

    Page: 200

    Language: Tamil

bottom of page