இப்போது, அறிவியலில் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன. அறிவியல் என்றாலே இப்படித்தான். தினமும் அது தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கும். புதிய கோட்பாடுகள் முளைக்கையில், பழைய கோட்பாடுகளைப் பாம்புச் சட்டையாகக் கழட்டி எறிந்துவிடும். தயங்கவே தயங்காது. அறிவியலில் உண்மை என்பது அந்த அந்தத் தினங்களுக்கானது. நேற்றைய உண்மை இன்று இல்லையென்றாகி, இன்று புதியதொரு உண்மை முளைத்திருக்கும். நாளை இதையும் பொய்யாக்க வேறொரு உண்மை முளைக்கும். அறிவியல் என்றாலே மாற்றங்கள் மட்டும்தான்.
பிரபஞ்சம் என்பதை அண்டம்/பேரண்டம் என்றும், சக்தி என்பதை ஆற்றல் என்றும் விஞ்ஞானம் என்பதை அறிவியல் என்றும் விஞ்ஞானிகளென்பதை அறிவியலாளர்கள்/ஆய்வாளர்கள் என்றும் நட்சத்திரம் என்பதை உடு என்றும் காலக்சிகள் என்பதை உடுத்திரள் என்றும் மாற்றியமைத்திருக்கிறேன். சிரமம் பார்க்காமல், இந்தத் தமிழ்ச் சொற்களுக்கு உங்களையும் தயார்படுத்திக்கொள்ளுங்கள். நீங்களும் முடிந்தால் பயன்படுத்துங்கள்.
இறந்த பின்னும் இருக்கிறோமா...?
எழுத்தாளர் : ராஜ் சிவா (Raj Siva)
பதிப்பகம் : எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
புத்தக வகை : Science | அறிவியல், Essay | கட்டுரை, 2024 New ReleasesBiography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு , Essay | கட்டுரை , 2024 New Releases
பக்கங்கள் : 157

