top of page

ஐம்பெரும் காப்பியங்களுள் குண்டலகேசியின் கதைக்களம் மிகவும் சுவாரசியமானது. களப்பிரர்களின் காலமான பொ.யு. 2ம் நூற்றாண்டிலிருந்து 5ம் நூற்றாண்டு வரை கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகள் தமிழகத்தைக் களப்பிரர்கள் ஆண்டதாகக் கூறப்படும் காலத்தில் இந்தக் கதை நிகழ்கிறது. அதுவரையில் நில அமைப்பை வைத்தே அறியப்பட்ட தமிழ்நிலம் களப்பிரர்களுக்குப் பின்னர் மதத்தின் அடிப்படையில் வேறுபடத் தொடங்கியது. இதுவே இந்த நாவலின் அடிப்படையும்கூட. இதுவரையில் குண்டலகேசி கதையைக் காப்பிய வடிவில் பலரும் எழுத முயன்றிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் கற்பித்து நூலை விரித்து எழுதியுள்ளனர். எழுத்தாளர் சத்தியப்பிரியன் தனது இலக்கியச் செறிவுமிக்க தமிழால், வாசகர்களைக் கட்டிப்போடும் தரமான நடையில் குண்டலகேசியை நாவல் வடிவில் வழங்கி இருக்கிறார். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி ஆகிய நான்கு நூல்களையும் நாவல் வடிவில் எழுதிய சத்தியப்பிரியன், இந்த நூலையும் எழுதியதன் மூலம், ஐம்பெருங்காப்பியங்களையும் நாவல் வடிவில் எழுதி சாதனை படைத்துள்ளார்.Author: சத்தியப்பிரியன்

Publisher: சுவாசம்

 

Other Specifications

Language: தமிழ்

ISBN: 9788119550388

Published on: 2025

Book Format: Paperback

Category: நாவல்Subject: இலக்கியம்

Gundalakesi / நாவல் வடிவில் குண்டலகேசி

18,00 CHFPreis
Anzahl
  • Author: சத்தியப்பிரியன்

    Publisher: சுவாசம்

     

    Other Specifications

    Language: தமிழ்

    ISBN: 9788119550388

    Published on: 2025

    Book Format: Paperback

    Category: நாவல்

    Subject: இலக்கியம்

     

bottom of page