“ஷேர் ரேட் சூப்பரா உயர்ந்திருக்கே, சபாஷ்!” “அடக் கடவுளே! இன்னைக்கு ஷேர் இவ்ளோ இறங்கிடுச்சே..!” - பஸ், ரயில் பிரயாணங்களில் இதுபோன்ற ‘டயலாக்’கை நீங்கள் அடிக்கடி கேட்டிருப்பீர்கள். ‘இந்தியப் பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகிக்கும் ‘ஷேர் மார்க்கெட்’டில் அப்படி என்னதான் இருக்கு..?’ என்ற கேள்விக்கு, உரிய பதிலைத் தேடுவோர் அநேகர். அதிக அளவில் முதலீடு செய்து இயங்கிவரும் ஸ்தாபனம் அல்லது புதிதாக தொடங்கப்பட இருக்கும் ஸ்தாபனம் வெளியிடும் முதலீட்டுப் பங்குகளை, லாப நோக்கில் வாங்குவதும் - விற்பதுமான வியாபார நடைமுறையை பங்குச் சந்தை ( SHARE MARKET ) என்கிறார்கள். பங்குச் சந்தையில் எந்த வகையான பங்குகளை வாங்கலாம், ஒரு பங்கை வாங்கும்முன் நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை, ஒரு பங்கு எந்த நிலையில் இருக்கும்போது வாங்க விற்க வேண்டும், பங்குச் சந்தையில் ‘காளை’ மற்றும் ‘கரடி’ நிலைகளை அறியும் வழிமுறை, இதில் நிபுணராக நாம் மேற்கொள்ள வேண்டிய யுக்தி... போன்ற பல்வேறு தகவல்களை நடைமுறை உதாரணங்களோடு விளக்கியுள்ளார் நூலாசிரியர் சொக்கலிங்கம் பழனியப்பன். நாணயம் விகடனில் ‘பங்குச் சந்தை ஆத்திசூடி’ என்ற தலைப்பில் வெளிவந்த தகவல் தொகுப்புதான் இந்த நூல். ‘வீட்டுப் பாடம்’ என்ற தலைப்பில், பங்கு பரிவர்த்தனையில் ஈடுபடுவதற்கான சில பயிற்சி முறைகளை அத்தியாயம் தோறும் சொல்லி இருப்பது, இந்த நூலுக்கே உரிய தனிச்சிறப்பு. மொத்தத்தில், சாமானிய மக்களும் ‘ஷேர் மார்க்கெட்’ தொடர்பான அடிப்படை அறிவைப் பெறவேண்டும் என்பதே இந்த நூலின் நோக்கம்.
ஷேர் மார்க்கெட் A to Z (Share Market A to Z)
Author: சொக்கலிங்கம் பழனியப்பன்,Chokkalingam Palaniyappan
Publisher: விகடன் பிரசுரம் Vikatan
Language: தமிழ்
ISBN: 9788184763799
Published on: 2011
Category: Essay | கட்டுரை
Subject: வணிகம்