top of page

விசாவிற்காக காத்திருக்கிறேன்: டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் நினைவலைகள்

 

வெளிநாட்டினருக்குத் தீண்டாமை நிலவி வருவது ஐயத்துக்கு இடமின்றித் தெரியும். ஆனால், தீண்டாமை நிலவி வரும் பகுதிக்கு அருகில் அவர்கள் வாழாததால், நடைமுறையில் அது எத்தகைய ஒடுக்குமுறைமிக்கதாகத் திகழ்கிறது என அவர்களால் உணர முடியவில்லை. பெரும் எண்ணிக்கையிலான இந்துக்கள் வாழும் கிராமத்தின் விளிம்புப் பகுதியில் எப்படிச் சில தீண்டப்படாதோர் வாழ்கிறார்கள் என அவர்களுக்குப் புரியவில்லை. அவர்கள் எப்படிக் கிராமத்தின் சகிக்கவே முடியாத கழிவுகளை அனுதினமும் அகற்றிவிட்டு, அக்கிராமத்தினர் அனைவரின் ஏவல்களுக்கும் அடிபணிந்து உழல்கிறார்கள் என்றும், இந்துக்களின் வாசல்களில் நின்று சோறு வாங்கிவிட்டு, இந்து பனியாக்களின் கடைகளில் எட்டநின்றபடி மசாலாவும், எண்ணெய்யும் வாங்குகிறார்கள் என்றும் பிடிபடவில்லை. எல்லா வகையிலும் கிராமத்தைத் தங்களின் சொந்த மண்ணாகக் கருதினாலும், கிராமத்தைச் சேர்ந்த எவரொருவரையும் ஒருபோதும் தொடமுடியாதபடியும், எவரொருவராலும் தீண்டப்படாமலும் அவர்களால் எப்படி இருக்க முடிகிறது என்பதும் வெளிநாட்டினருக்கு விளங்கவில்லை. சாதி இந்துக்களால் தீண்டப்படாதோர் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதைத் தெளிவாகப் புரியும்படி எப்படி விளக்குவது என்பதே நம்முன் உள்ள பிரச்சினையாகும். இந்நோக்கத்தை அடைந்தேற, பொதுவாக விவரித்துச் செல்வது, தீண்டப்படாதோர் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதைக் காட்டும் நிகழ்வுகளைப் பதிவு செய்வது எனும் இரு வழிமுறைகள் உள்ளன. பொதுவாக விவரிப்பதை விட நிகழ்வுகளைக் கவனப்படுத்துவது மேலானதாக இருக்கும் என உணர்ந்திருக்கிறேன். இந்த நிகழ்வுகளைத் தேர்வு செய்கையில், சில பகுதிகள் என்னுடைய அனுபவங்களாகவும், பிற பகுதிகள் பிறரின் அனுபவங்களாகவும் இருக்குமாறு அமைத்துக் கொண்டேன். என்னுடைய சொந்த வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளோடு தொடங்குகிறேன்.

விசாவிற்காக காத்திருக்கிறேன் / Visavirkaaga Kaththirukkiren

CHF10.00Preis
Anzahl
  • எழுத்தாளர் :    Dr. B.R. Ambedkar, டாக்டர் அம்பேத்கர்

    Translator :       பூ.கொ.சரவணன் (Pu.Ko.Saravanan)

    பதிப்பகம் :   Ethir Veliyeedu எதிர் வெளியீடு

    புத்தக வகை :பகுத்தறிவு சிந்தனை | Rational Thinking , Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Essay | கட்டுரை, Staff Picks, நாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு, சமூக நீதி, தலித்தியம்

    பக்கங்கள் :     55

    பதிப்பு :              1

    Published on :    2023

    ISBN :            9788196404611

     

தமிழ் புத்தகங்கள்

சுவிட்சர்லாந்து

tamilbooksinfo@gmail.com

தொலைபேசி: 0791043701

சமூக

  • Facebook Social Icon
  • Instagram

எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்யவும்

சமர்ப்பித்ததற்கு நன்றி!

bottom of page