’தினகரன் வெள்ளிமலர்’ இணைப்பிதழில் வெளியான ‘டைரக்டர்ஸ் கட்’ தொடரின் நூல் வடிவம் இது.
ஒவ்வொரு சினிமாவின் உருவாக்கத்துக்கும் பின்னால் இருக்கும் Behind the Scenesஐ முடிந்தளவு இப்புத்தகம் பதிவு செய்ய முயன்றிருக்கிறது. வீழ்ச்சியை அல்ல, எண்ணற்ற சிரமங்களுக்கு இடையில் படைக்கப்பட்டதை வெளிச்சமிட்டுக் காட்ட முற்பட்டிருக்கிறது.
இதில் வெற்றிகள் இடம்பெற்றிருக்கின்றன. தோல்விகள் குறிக்கப்பட்டிருக்கின்றன. களைகள் கட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன. Presence of Mind போற்றப் பட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் அடிநாதமாக நம்பிக்கை விதைக்கப்பட்டிருக்கிறது.
சினிமா என்பது கனவுத் தொழிற்சாலையும் அல்ல. கனவுத் தொழிற்சாலையும் அல்ல. இதுவும் ஒரு தொழிற்சாலை. இதிலும் நல்லது கெட்டதுகள் உண்டு. அப்படிப்பட்ட ஒரு தொழிற்சாலையின் சில துளிகள்தான் இவை.
தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் - Director's Cut
எழுத்தாளர் : கே.என்.சிவராமன் (Ke.En.Sivaraaman)
பதிப்பகம் : சூரியன் பதிப்பகம் (Suriyan pathipagam)
புத்தக வகை : சினிமா, Essay, கட்டுரை,Cinema
பக்கங்கள் : 512
பதிப்பு : 9789385118951
ISBN : 2017