| தலைவலி: பாதிப்புகளும் தீர்வுகளும் (Thalaivali pathippukalum theervukalum) |
இந்த உலகத்தில் உள்ள ஒரு பொதுவான நோய் எது என்றால், கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம், ‘தலைவலி’. * தலைவலி ஏன் வருகிறது? * எல்லாத் தலைவலிகளும் ஒன்றுதானா? * தலைவலி வந்தால் தானாகவே சரியாகப் போய்விடும் என்று விட்டுவிடலாமா? * ‘கை வைத்தியத்துக்கு மிஞ்சிய மருந்து இல்லை’ என்று சுக்கை அரைத்துப் போட்டால் போதுமா? * ‘பாராசிட்டமால் மாத்திரையைப் போட்டால் எந்தத் தலைவலியாக இருந்தால் பஞ்சாகப் பறந்துவிடும்’ என்று நாமாகவே முடிவெடுக்கலாமா? தலைவலிகளின் வகைகள், அதற்கான காரணங்கள், தலைவலி வந்தால் நாம் செய்யவேண்டியது என்ன என்கிற அறிவுரைகள் என அனைத்தையும் விவரிக்கிறார் டாக்டர் ஜெ.பாஸ்கரன். சாமானியர்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் இந்தப் புத்தகம் எளிமையாக எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய அவசியமான கையேடு இது. டாக்டர் ஜெ.பாஸ்கரன் இதற்கு முன்பு ‘சரும நோய்கள்’ மற்றும் ‘வலிப்பு நோய்கள்’ (தமிழ் வளர்ச்சித் துறையின் விருது பெற்ற நூல்) என்கிற நூல்களையும் எழுதி உள்ளார்.
தலைவலி: பாதிப்புகளும் தீர்வுகளும்
Author: டாக்டர் ஜெ.பாஸ்கரன் Dr. J. Bhaskaran
Publisher: சுவாசம் பதிப்பகம் (Swasam Publisher)
No. of pages: 104
Language: தமிழ்
Published on: 2022
Category: Categories: Essay | கட்டுரை , Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம் , Family - Relationship | குடும்பம் - உறவு , New Arrivals

