1975 ஏப்ரல் வாக்கில் திடீரென்று நண்பர் விக்ரமாதித்யன் சென்னைக்கு என்னைத் தேடி வந்தார். "பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் படித்த நண்பர்கள் சிலர் சேர்ந்து எனது சிறுகதைகளைத் தொகுப்பாகக் கொண்டுவர விரும்புவதாகவும், கதைகளைக் கொடுங்கள்" என்று கேட்டார். கைவசமிருந்த கதைகளை நம்பிராஜன் வாங்கிக் கொண்டு திருநெல்வேலிக்குப் போனார்.
அப்போது சிறுகதைத் தொகுப்பு வரவேண்டுமென்ற ஆசையைவிட வேலை கிடைக்கவேண்டும் என்ற ஆசை தான் அதிகமாக இருந்தது. வேலை தேடி அல்லாடிக் கொண்டிருந்தேன். சிறுகதைகளை விக்ரமாதித்யன் வாங்கிச் சென்றதெல்லாம் மறந்தே போய்விட்டது. இரண்டு மாதம் கழித்து எனது சென்னை முகவரிக்கு எஸ்தர் பிரதிகள் தபாலில் வந்துசேர்ந்தன. ஆச்சரியமாக இருந்தது...
எஸ்தர் தொகுப்பு தமிழிலக்கிய உலகத்தில் நான் எதிர் பார்த்திராத அளவுக்கு முக்கியத்துவமும் பெற்றுவிட்டது.
- வண்ணநிலவன்
எஸ்தர் / Esther
Author: வண்ணநிலவன்
Publisher: நற்றிணை பதிப்பகம்
No. of pages: 104
Language: தமிழ்
ISBN: 9788192366838
Published on: 2014
Book Format: Paperback
Category: சிறுகதை
Subject: பிற