அறிவுப் பயணத்தில் புதிய திசைகள் (1881-1883)
தமிழில்: எஸ். வி. ராஜதுரை
கார்ல் மார்க்ஸின் கடைசி மூன்றாண்டுகளில், அவர் சொந்த வாழ்வில் எதிர்கொண்ட கடும் சோதனைகளையெல்லாம் மீறி, கணிதவியல் ஆராய்ச்சிக்கு முக்கியப் பங்களிப்புச் செய்ததையும், மானுடவியலில் மேற்கொண்ட ஆராய்ச்சிகளில் கிடைத்த முடிவுகளையும், எண்ணற்ற வரலாற்று நூல்களிலிருந்து கற்றவற்றையும் அவர் தமது அரசியல், பொருளியல், கோட்பாடுகளைச் செழுமைப்படுத்தப் பயன்படுத்தியதையும் எடுத்துரைக்கிறார் மார்செல்லோ முஸ்ட்டோ. ரஷிய மொழியில் புலமை பெற்று, ரஷியாவில் புரட்சிக்கான சாத்தியப்பாடுகளை விவாதித்திருக்கிறார் மார்க்ஸ். இந்தியா, இந்தோனீஷியா,அல்ஜீரியா போன்ற நாடுகளில் நடந்த காலனியச் சுரண்டலைக் கண்டனம் செய்திருக்கிறார். சர்வதேச நிகழ்வுகளைக் கூர்மையாக அவதானித்து உழைக்கும் மக்களின் விடுதலை தொடர்பான எழுத்துகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்த மார்க்ஸ், பெண்கள் பிரச்சினையில் ஆழமான அக்கறை செலுத்தியிருக்கிறார். முன்கூட்டியே வகுக்கப்பட்ட கோட்பாட்டுச் சூத்திரங்களை எல்லா இடங்களுக்கும் எல்லாக் காலங்களுக்கும் பயன்படுத்துவதை வெறுத்த மார்க்ஸின் செழுமையான இயக்கவியல் பார்வையை மட்டுமின்றி, அவரது கலை - இலக்கிய இரசனைகளையும், கனிவும் அன்பும் பாசமும் நிறைந்த கணவராக, தந்தையாக, பாட்டனாராக, நண்பராக அவர் வகித்த பாத்திரங்களையும் சிந்தனைக்கு விருந்தாக்கும் இந்த நூல், வியப்பு தரும் பல வரலாற்றுச் செய்திகளையும் உள்ளடக்கியுள்ளது.
Karl Marx கார்ல் மார்க்ஸ் அறிவுப் பயணத்தில் புதிய திசைகள் (1881-1883)
- Edition: 1
- Year: 2018
- ISBN: 9788123436968
- Page: 236
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher:நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்