சமீபத்தில் இத்தனை சுவாரஸ்யமான தொழில்நுட்பம் தொடர்பான புத்தகத்தை வாசித்ததில்லை. AI, Chat GPT போன்றவற்றைக் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற விருப்பம் இருந்தது. அதற்கு முயற்சி செய்தபோதெல்லாம் சந்தேகத்துக்கு மேல் சந்தேகம் வந்து முயற்சி பாதியில் நின்று போனது. என்னுடைய முயற்சியைப் பார்த்தோ என்னவோ சரியான நேரத்தில் ஹரிஹரசுதன் தங்கவேலு எழுதிய, 'AI எனும் ஏழாம் அறிவு' என்கிற இந்தப் புத்தகம் குறித்து பேசுகிற வாய்ப்பு கிடைத்தது. எளிமையான விளக்கங்கள்.. இப்போது அடிப்படைத் தெளிவு கிடைத்திருக்கிறது என்றே நம்புகிறேன்.
- எழுத்தாளர் ஜா.தீபா
AI எனும் இரு எழுத்துகள்தான் உலகின் இன்றைய ட்ரெண்டிங். ‘சாட்ஜிபிடி' எனும் ஒற்றை செயலி நிகழ்த்தும் தொழில்நுட்ப மாயங்கள் ஆச்சர்யத்தின் அடுத்த கட்டம். ஆனால் அதையும் கடந்து மனித அறிவை விஞ்சி சிந்திக்கும் சூப்பர் இன்டெலிஜென்சை யார் முதலில் உருவாக்குவது என திகில் கிளப்பும் ஒரு புதிய போட்டி வேறு துவங்கியுள்ளது. நம் பூமிக்கு வந்த இந்த புதிய படைப்பு யார்? AI எனும் இந்த அசுர சிந்தனை அறிவியலைப் புரட்டிப் போடுமா, காலப் பயணத்தை சாத்தியப்படுமா, இவன் நண்பனா, எதிரியா? எப்படி உருவாகிறான், நம் விருப்பங்களை எப்படி செயல்படுத்துகிறான்? இவனது எதிர்காலம் என்ன? என்ற பல புதிர்களை விளக்குவது மட்டுமன்றி, AI எனும் செயற்கை நுண்ணறிவு குறித்த ஒரு முழுமையான புரிதலையும் இப்புத்தகம் உங்களுக்குத் தரும். வாருங்கள்! புதியன கற்போம்.
AI எனும் ஏழாம் அறிவு / AI ENUM EZHAM ARIVU
எழுத்தாளர் : ஹரிஹரசுதன் தங்கவேலு, Hariharasuthan Thangavelu
பதிப்பகம் : எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
புத்தக வகை : Science | அறிவியல், Essay | கட்டுரை, 2024 New Releases New Arrivals
பக்கங்கள் : 191