வாழ்க்கை முழுவதும் யுத்தங்கள்! போராட்டங்கள்! லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தை யும் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கும்வேட்கை. சே ஒரு தனிமனிதரல்லர். ஒரு மாபெரும் நிலப்பரப்பின் மனச்சாட்சி.
பிறப்பால் ஓர் அர்ஜென்டைனர் என்றாலும், ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சிக் குழுவில் இணைந்து, க்யூபாவின் விடுதலைக்காகப் போராடினார். க்யூபா விடுவிக்கப்பட்டதும், சேவுக்குப் பல உயர் பதவிகள் அளிக்கப்பட்டன. ஆனால் நாற்காலியில் உட்கார்ந்து ஆவணங்கள் பார்க்கும் விருப்பம் அவருக்கு இல்லை. உதறித் தள்ளிவிட்டு துப்பாக்கி ஏந்தி பொலிவியாவுக்குச் சென்றார். அடர்ந்த காட்டில் உட்கார்ந்து புரட்சிப் படையை உருவாக்கினார். க்யூபாவுக்காகவும், பொலிவியாவுக்காகவும் சே ஏன் போராட வேண்டும்? இவருடைய எதிரிகள் யார்? சி.ஐ.ஏ.வும் இவரை வலை வீசித் தேடியது ஏன்? இவரைச் சுட்டுக் கொன்றவ ர்கள் யார்?
ஏகாதிபத்தியம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும். சேவின் வாழ்வு மட்டுமல்ல, அவரது மரணமும் இந்தச் செய்தில் யத்தான் உரக்கச் சொல்கிறது. விடுதலை வேட்கை உள்ள அனைவருக்கும் இந்த நிமிடம் வரை உந்துசக்தியாக விளங்கும் சே குவேராவின் விறுவிறுப்பான வாழ்க்கைவரலாறு இந்நூல்.
சே குவேரா வேண்டும் விடுதலை Che Guvera Vendum Viduthalai
- Language: Tamil
- Binding: Paperback
- Publisher: New Horizon Media Private Limited
- Genre: Biography & Autobiography
- ISBN: 9788183682442, 9788183682442
- Pages: 160