top of page

தமிழ் வளர்த்த புலமைச் செறிவுடன் திகழ்ந்தவர்களுள், ஆண்களைப் போலவே பெண்களும் பலராவர். கடைச் சங்க நூற்களில் ஒளவையார், வெள்ளி வீதியார், ஆதிமந்தியார், பூதப்பாண்டியன் தேவியார் போன்ற பலரைக் காணுகின்றோம். நாமகளைக் கல்வியின் தெய்வமாக ஏற்றிக் கூறும் பாரத நாட்டிலே, சிலர் "பெண்களுக்கு ஞானத்தை அறிவுறுத்தல் கூடாது; அவர்கள் அதற்குத் தகுதி யுடையவர்கள் அல்லர்; அவர்கள் பாவப் பிறவிகள்; ஆண்களை ஒட்டி வாழ்ந்து மடியவேண்டியவர்கள்; ஆண்களின் இன்ப சுகத்துக்காகவே ஏற்பட்டவர்கள்" என்றெல்லாம் கூறி, அவர்களைப் பெரிதும் புறக் கணித்திருக்கின்றனர். ஆனால், நம் அருமைத் தமிழகத்திலோ, அந்த நிலை என்றுமே இருந்த தில்லை. தாயான தமிழ், தாய்மாரிடமிருந்து ஒதுங்கவு மில்லை; அவர்களால் ஒதுக்கப்படவுமில்லை. இதற்கு எடுத்துக்காட்டாகவும் தமிழ் மூதாட்டியான ஒளவைப் பிராட்டியாரின் அழகுதமிழ்ச் செய்யுட்கள் விளங்கு கின்றன. மக்கள் மனமுவந்து போற்றவும், மன்னர்கள் மனம் விரும்பிப் பேணவுமாக, எளிமையும் அஞ்சாமையும் கொண்டு, இணையற்ற பெரும் புலவராக, மக்கள் தலைவராக ஒளவையார், அந்நாளிலேயே நம் தமிழகத்தில் விளங்கியிருக்கின்றனர்.

ஔவையார் தனிப்பாடல்கள்

15,00 CHFPreis
Anzahl
  • எழுத்தாளர் :        புலியூர்க் கேசிகன்

    பதிப்பகம் :           அமராவதி பதிப்பகம்

    Publisher :                Amaravathi Pathippagam

    புத்தக வகை :     ஆன்மீகம்

    பக்கங்கள் :          256

bottom of page