‘ஏவாளின் நாட்குறிப்பு’ என்ற இந்தச் சற்றே பெரிய சிறுகதை மார்க் ட்வைனின் மனைவி ஒலிவியா இறந்ததன் பின்னர் எழுதப்பட்டது. இதில் கூறப்படும் ஆதாம் மார்க் ட்வைன் என்றும், ஏவாள் அவரது மனைவி என்றும் சொல்லப்படுகிறது. அவரது வாழ்நாள் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது என்றும் கூறப்படுகிறது. பதிப்பித்த பின்னர், நூலகர் ஒருவர், பெண்மணி, இந்தப் புத்தகம் ஆபாசமானது என்று வழக்கு தொடுக்கிறார். அமெரிக்காவின் பல மாநிலங்களில் நிர்வாணமான பெண்ணின் படத்தைக் கொண்டிருப்பதால், புத்தகம் தடை செய்யப்படுகிறது. பல நூலகங்களும் புத்தகத்தை வைத்துக் கொள்ள மறுக்கின்றன. மார்க் ட்வைன் அவரது வழக்கமான வேடிக்கையுடன் இதைக் கடக்கிறார். “என்னுடைய புத்தகத்தைத் தடை செய்யும் நூலகங்களில், முழுமையான பைபிள் சிறுவர்களும், இளைஞர்களும் படிக்கும் வண்ணம் பொதுவில் வைக்கப் பட்டிருக்கிறது என்பதன் முரண் எனக்குச் சிரிப்பைத்தான் தருகிறது, கோபத்தை அல்ல.” என்கிறார். இவற்றை எல்லாம் கடந்து, இந்தச் சிறுபுத்தகம் ஒரு காதல் கதையாக, ஒரு பதின்ம வயது பெண்ணின் மனவோட்டமாக, எழுத்தாளன் ஒருவன் தன் மனைவிக்கு எழுதிய காதல் கடிதமாக என்று பலவிதங்களில் நம்மை ஈர்க்கிறது.
ஏவாளின் நாட்குறிப்பு / Evalin Natkurippu
Author: மார்க் ட்வைன் (Mark Twain)
Translation: வானதி (Vaanathi)
Publisher: வானதி
No. of pages: 123
Language: தமிழ்
Published on: 2021
Category: Translation | மொழிபெயர்ப்பு, Diary & Memoir | நாட்குறிப்பு & நினைவுக்குறிப்பு, 2023 New Arrivals