இது அம்பேத்கர் எழுதிய முதல் நூல் என்பதால் மட்டுமல்ல; அதன் உள்ளடக்கம் காரணமாகவும் முக்கிய நூலாக விளங்குகிறது. அவரின் பிற்கால அரசியல் செயற்பாடுகளின் செயற்களமாகவும், ஆய்வுச் சிந்தனைகளாகவும் அமைந்த சாதி மறுப்பு அரசியலின் தொடக்கமாக இந்நூலே அமைந்துள்ளது. அவரின் கோட்பாடு மற்றும் அரசியல் பங்களிப்பாக விளங்கும் சாதி ஒழிப்பு என்ற கருத்தியலின் விவாதப்புள்ளியை இந்நூலிருந்து நாம் புரிந்துகொள்ள முடியும். சாதிஒழிப்பு என்கிற அரசியல் முடிவை இந்நூலில் அவர் அறுதியிட்டுக் கூறவில்லையெனினும், அதை ஒழிக்க முடியும் என்கிற நம்பிக்கையை அவர் அடைவதற்கான காரணமாக சாதியை அவர் புரிந்து கொண்டிருந்த விதம் இந்த நூலிலேயே காணக்கிடக்கிறது. அந்தவகையில் இது ஒரு முழுமையான ஆய்வு நூல்.
உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. சாதியை அடிப்படையாக வைத்த நீங்கள் எதையும் உருவாக்க முடியாது. தேசிய இனத்தை உருவாக்க முடியாது. ஒரு ஒழுக்கப் பண்பை உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாக வைத்து நீங்கள் எதை உருவாக்கினாலும் அது உடைந்து சிதறி உருப்படாமற் போகும்.
இந்தியாவில் சாதிகள் / Indhiyavil Saathigal
எழுத்தாளர் : Dr. B.R. Ambedkar, டாக்டர் அம்பேத்கர்
பதிப்பகம் : Ethir Veliyeedu எதிர் வெளியீடு
புத்தக வகை :பகுத்தறிவு சிந்தனை | Rational Thinking , Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Essay | கட்டுரை, Staff Picks
பக்கங்கள் : 168
பதிப்பு : 1
Published on : 2020
ISBN : 9789384646561
குறிச்சொற்கள் : 2018