பங்குச்சந்தையின் பரவலாக்கல் வேகமாக நடந்து வருகிறது. பெரிய அளவில் பணம் சம்பாதிக்க பங்குச்சந்தை அனைவருக்கும் ஒரு சமமான வாய்ப்பைத் தருகிறது. அதுவும் நேர்மையாக, சட்டபூர்வமாக பணம் சம்பாதிக்கும் ஒரு வழி. இனி யாரும் "ஷேர் மார்க்கெட் எனக்குத் தேவையில்லை' என்று விட்டுவிடமுடியாது. ஷேர் மார்க்கெட் என்றால் என்ன எனத் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். அந்த வகையில் இது, பங்குச்சந்தை பற்றித் தெரியாதவர்களுக்கும், ஓரளவுக்கு மட்டுமே தெரிந்தவர்களுக்கும் விளக்கமளிக்கும் ஒரு புத்தகம். பங்குச்சந்தையைச் சூதாட்டம் போலக் கருதி, எவ்வித யோசனையும் இன்றி ஏதேனும் பங்குகளை வாங்குவது அல்லது விற்பது; அதிகம் அறிமுகமில்லாத நிறுவனங்களின் பங்குகள் விலை குறைவாக இருக்கின்றது என்பதற்காக வாங்கி, பின்பு அவை காணாமல் போவதால், போட்ட முதலீட்டை இழப்பது - இவற்றையெல்லாம் எப்படித் தவிர்ப்பது? அதற்கு இந்தப் புத்தகம் உதவும். பங்குச்சந்தையை எப்படி அணுகவேண்டும், அதில் எப்படிக் கவனமாக முதலீடு செய்ய வேண்டும் என்பன போன்ற அடிப்படைகளை விளக்கி இருக்கிறார் பங்குச்சந்தை ஸ்பெஷலிஸ்ட் சோம. வள்ளியப்பன்.
ஆட்டமா சூதாட்டமா / Aattamaa Soodhaattama
எழுத்தாளர் : Soma Valliappan, சோம வள்ளியப்பன்
பதிப்பகம் : Swasam Bookart, சுவாசம்
புத்தக வகை : Essay, கட்டுரை, Economics, பொருளாதாரம்
பக்கங்கள் : 111
பதிப்பு : 1
Published on : 2024